IIT மெட்ராஸில் 40,000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கான அறிவிப்பு வந்திருக்கு!

IIT மெட்ராஸில் 40,000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கான அறிவிப்பு வந்திருக்கு

அரசாங்க வேலைக்காக காத்திருப்பவரா நீங்கள்? இது உங்களுக்கான அருமையான வாய்ப்பு. சென்னையில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT Madras) வேலை வாய்ப்பிற்கான புதிய அறிவிப்பு ஒன்று வந்திருக்கு. அதில் திட்ட மேலாளர் பதவியில் நிரப்புவதற்கு முடிவு செய்துள்ளது. இப்பணியில் ஒரு இடம் மட்டும் காலியாக உள்ளது. அதனால் இந்த வாய்ப்பை தவறவிடாமல் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

ALSO READ : பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே இமெயிலில் அப்ளை பண்ணிடுங்க…!

ஐஐடி மெட்ராஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு, முதுகலை முடித்தவர்கள் இந்த வேலை அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கட்டணம் இல்லை. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸில் பணிபுரியலாம்.

நேர்காணல் நடத்தி ஐஐடி மெட்ராஸ் Program Manager வேலைக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு மாத சம்பளம் ரூ. 40,000 பெற்றுக்கொள்ளலாம். எனவே விருப்பம் உள்ள நபர்கள் குறைவான கால அவகாசம் மட்டும் இருப்பதால் உடனே விண்ணப்பித்துவிடுங்கள். விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 9, 2024 முதல் பிப்ரவரி 25, 2024 -க்குள் விண்ணப்பிக்க டைம் தரப்பட்டுள்ளது.

தகுதியானவர்கள் ஐஐடி மெட்ராஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளமான iitm.ac.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது Apply Online லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள IIT Madras Notification லிங்கை கிளிக் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top