IIT மெட்ராஸ் வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பு வந்திருக்கு! 80,000 ஆயிரம் வரை சம்பளம் வாங்கலாம்!

IIT மெட்ராஸ்  வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பு வந்திருக்கு

சென்னை – தமிழ்நாட்டில் உள்ள திட்ட அலுவலர் பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை iitm.ac.in இல் இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (IIT Madras) வெளியிட்டுள்ளது. ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் தரப்பட்டுள்ள கால அவகாசம் பிப்ரவரி 5, 2024 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணபிக்கலாம்.

ALSO READ : திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான புதிய அறிவிப்பு வந்திருக்கு! உடனே விண்ணப்பியுங்கள்!

Project Officer பணியில் IIT மெட்ராஸ் ஒரு காலியிடம் ஒதுக்கபட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் மெக்கானிக்கல்/ சிவில்/ ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பிரிவில் பிஇ/ பி.டெக்/ எம்.டெக்/ பிஎச்.டி முடித்திருக்க வேண்டும்.

Project Officer வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர் சென்னை IIT மெட்ராஸ் பணி புரியலாம். விண்ணப்பக்கட்டணம் தேவையில்லை. நேர்காணல் முறையில் பணியாட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். IIT மெட்ராஸ் தனது நிறுவனத்தில் வேலை செய்யும் திட்ட அலுவலர் பணியாளருக்கு மாத சம்பளமாக ரூ. 50,000 முதல் ரூ.80,000 வரை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஐஐடி மெட்ராஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளமான iitm.ac.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை கவனமாக பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து ஆன்லைனில் அப்ளை பண்ணுங்கள்.

மேலும் விவரங்களை அறிய IIT Madras Recruitment 2024 Notification என்ற லிங்கை கிளிக் செய்யவும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க apply online லிங்கை கிளிக் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top