இந்தியன் ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட் (IRCON) நிறுவனத்தில் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு! மாத சம்பளம் ரூ.19,000 முதல் ரூ.80,000 வரை தராங்களாம்!

இந்தியன் ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட் IRCON நிறுவனத்தில் வேலை

இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட் (IRCON) அகில இந்திய அளவில் உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை ircon.org இல் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு வேலையில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். Assistant பணிக்காக 5 இடம் மட்டுமே நிரப்ப பட உள்ளது.

ALSO READ : TNPSC-ல் வெளியானது வேலை வாய்ப்பு அறிவிப்பு! 6244 காலி பணியிடங்களுக்கு உடனே அப்ளை பண்ணிடுங்க!

தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இந்தியா முழுவதும் பணியில் சேர்க்கப்படுவார்கள். AOS பதவியில் இரண்டு பணியிடமும், Assistant (Finance) பதவியில் மூன்று பணியிடமும் காலியாக உள்ளது. AOS வேலைக்கு விண்ணப்பிக்க CA, ICWA, M.Sc பட்டமும் , Assistant (Finance) வேலைக்கு விண்ணப்பிக்க M.Com பட்டமும் முடித்திருக்க வேண்டும்.

இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30 ஆக இருக்க வேண்டும். UR/OBC விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணமாக 1000 ரூபாயை டிமாண்ட் டிராஃப்ட் முறையில் செலுத்தலாம். SC/ ST/ EWS/ PWD/முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Interview மூலம் பணியாளர்களை தேர்வு செய்கிறது IRCON நிறுவனம்.தகுதியானவர்கள் IRCON அதிகாரப்பூர்வ வலைத்தளமான ircon.org இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கான கால அவகாசம் 20-01-2024 முதல் 09- 02-2024 வரை கொடுக்கப்பட்டுள்ளது. AOS பணியாளருக்கு ரூ. 28,000-80,000/- ஆகவும், Assistant (Finance)பணியாளருக்கு ரூ.19,000-56,000/- மாத சம்பளம் வழங்கப்படும்.

மேலும் விவரங்களை அறிந்துகொள்ள Official Notification- ஐ பார்க்கவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top