மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் உடனடி வேலை! 1,00,000 வரைக்கும் மாத சம்பளம் தராங்களாம்!

மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் உடனடி வேலை

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 22 காலியிடங்கள் உள்ளது. இந்த பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் ரொம்ப ஈஸியாக ஆன்லைன் வழியாக அப்ளை செய்யலாம்.

ALSO READ : டிகிரி முடித்திருந்தால் போதும் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை! சீக்கிரமா விண்ணப்பியுங்கள்!

MBBS படிப்பை முடித்தவர்கள் ONGC அறிவித்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார். Medical Officer-Field Duty பணியில் 21 காலியிடமும், Medical Officer-General Duty பணியில் 1 காலியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

அதிகாரபூர்வ அறிவிப்பின் படி அதிகபட்ச வயதானது 60 ஆக இருக்க வேண்டும். எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் Medical Officer-Field Duty பதவியில் பணிபுரிய 1,05,000 ரூபாய் மாத சம்பளமாகவும், Medical Officer-General Duty பதவியில் பணிபுரிய 1,00,000 ரூபாய் மாத சம்பளமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் மத்திய அரசின் இந்த வேலைக்கு மும்பையில் வேலை செய்ய ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் Interview வைத்து தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு அப்ளை பண்ண ஜனவரி 18, 2024 முதல் ஜனவரி 24,2024 வரை டைம் தரப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களை அறிய ONGC Recruitment 2024 Notification என்ற லிங்கை கிளிக் செய்யவும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க apply online லிங்கை கிளிக் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top