தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (TN TRB) 1768 காலி பணியிடங்கள்! Any Degree, B.Sc, Diploma முடித்திருந்தால் போதும்!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (TN TRB)1768 காலி பணியிடங்கள்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் இரண்டாம் நிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடம் காலியாக உள்ளதாக அறிவித்துள்ளது. TN TRB மொத்தம் 1768 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு தவறாமல் அப்ளை பண்ணிடுங்க. இந்த பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ALSO READ : IIT மெட்ராஸில் 40,000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கான அறிவிப்பு வந்திருக்கு!

கல்வித்தகுதி :

TN TRB-யின் இரண்டாம் நிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு Any Degree, B.Sc, Diploma முடித்தவர்கள் தாரளமாக விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள் :

இரண்டாம் நிலை பட்டதாரி ஆசிரியர் வேலைக்கு தமிழ்நாடு அரசு 1768 பணியிடங்களை ஒதுக்கியுள்ளது.

வேலையிடம் :

ஆசிரியர் பணிக்கு தேர்வாகும் அனைத்து நபர்களும் சென்னையில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

சம்பளம் :

இரண்டாம் நிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு மாத சம்பளம் ரூ.20,600 முதல் ரூ.75,900 வரை வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

வயது வரம்பு :

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 53 வரை இருக்கலாம்.

அப்ளிகேசன் பீஸ் :

விண்ணப்பக்கட்டணமாக SC/ST பிரிவினர் 300 ரூபாயும், மற்ற அனைத்து பிரிவினரும் 600 ரூபாயும் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யும் முறை :

பின்வரும் அடிப்படையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கிறது.

  • கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு
  • எழுத்து தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

முக்கிய தேதிகள் :

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : பிப்ரவரி 10, 2024
  • விண்ணப்பிக்க கடைசி தேதி : மார்ச் 15,2024

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் Apply Online பட்டனை கிளிக் செய்து விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

மேலும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வேலை வாய்ப்பு தகவல்களை அறிய TN TRB Official Notification-ஐ பாருங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top