நெருங்கி வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை : களைகட்டிய வீரகனூர் ஆட்டுச்சந்தை! ரூ.1.50 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்ட ஆடுகள்…

Approaching Christmas Weedy Weeraganur Goat Market Goats sold for more than Rs.1.50 crore

சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் என்னும் பகுதியில் வாரந்தோறும் சனிகிழமை அன்று கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த கால்நடை சந்தைதான் மாவட்டத்திலேயே நடைபெறும் மிகப்பெரிய சந்தையாகும். இந்த சந்தைக்கு சேலம்’ மாட்டம் மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களில் இருந்தும் கால்நடைகளை விற்பனை செய்வதற்காகவும், புதிதாக கால்நடைகளை வாங்குவதற்காகவும் ஏராளமானோர் வருகை தருவார்கள். அதிலும் குறிப்பாக வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், மேச்சேரி இன ஆடுகள் என பல்வேறு வகையான இன ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்படும்.

ALSO READ : வைகுண்ட ஏகாதசி எதிரொலி : பூக்களின் விலை பலமடங்கு உயர்வு!

இந்நிலையில், வருகிற 25 ஆம் தேதி(நாளை மறுநாள்) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் வீரகனூரில் இன்று நடைபெற்ற கால்நடை சந்தையில் ஆடுகளின் விற்பனை களைக்கட்டியுள்ளது. இந்த சந்தையில் விற்பனை செய்தவதற்காக ஆயிரக்கணக்கான ஆடுகள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட மாடுகளும் கொண்டு வரப்பட்டன. பெரும்பாலும் இந்த வீரகனூர் கால்நடை சந்தைக்கு கறிக்கடை வியாபாரிகள்தான் அதிகம் வருவார்கள். அதிலும் குறிப்பாக ஆத்தூர், வாழப்பாடி, தலைவாசல், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட கறிக்கடை வியாபாரிகள் இன்று கூடியதால் இன்று சந்தை களைகட்டியது.

மேலும் கிறிஸ்துமஸ் முன்னிட்டு பொதுமக்களும் குவிந்ததால் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. விறுவிறுப்பாக நடந்த ஆட்டு சந்தையில் விவசாயிகள் கொண்டு வந்த ஆடுகளை வியாபாரிகளும் பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.ஆடுகள் தரத்திற்கேற்றவாறு உயிருடன் ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. இதில் ஆடுகள் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top