அடேங்கப்பா நாய்க்கு அரேஞ் மேரேஜா? ஜோடி நல்ல ஜோடி..! வைரல் வீடியோ!

0
Arange Mereja for Adengappa Dog The couple is a good couple Viral video-Arrange Marriage For Two Dogs

திருமணம் என்பது இருமனங்கள் இணைந்து இரு வேறு குடும்பங்கள் இணைந்து நடக்கும் ஒரு நிகழ்வாகும். இந்து குடும்ப அமைப்பில் நடுக்கும் ஒரு திருமணத்திற்கு அனைத்து உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், ஊறார்கள் என அனைவரும் வருகை புரிந்து ஆசிர்வதிக்கும் ஒரு மகிழ்ச்சியான தருணமாகும்.

இந்நிலையில், தற்பொழுது உள்ள வளர்ந்து வரும் காலகட்டத்தில் விமானத்தில் திருமணம் செய்துகொள்வது, தெருவில் திருமணம் செய்துகொள்வது, திருமண வரவேற்பின்போது திரையிசை பாடல்களுக்கு நடனமாடியபடியே வருவது போன்ற பல விதங்களில் திருமணத்தை நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, இத்தகைய வித்தியாசமான திருமணங்கள் அனைத்தும் தற்போது மனிதர்களுக்கு மட்டும் இல்லை செல்லபிராணிகளுக்கும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், ஹரியானாவில் உள்ள குருகிராம் நகரில் இரண்டு நாய்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். இந்த திருமணத்திற்கு தெரிந்தவர்களில் மொத்தம் 100 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. அவர்களுக்கும் கலந்துகொண்டு இரு செல்லப்பிராணிகளையும் வாழ்த்திவிட்டு சென்றனர்.

இந்த திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற நிகழ்வாகும். இந்த திருமணம் செரு (ஆண் நாய்), ஸ்வீட்டி (பெண் நாய்) இருவருக்கும் நேற்று இரவு 8.30 மணியளவில் திருமணம் நடந்துள்ளது. ஸ்வீட்டி என்ற பெயருடைய செல்லப்பிராணியை வளர்த்தவர் கூறுகையில், எனக்கு பிள்ளைகள் என்று யாருமில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் கோயில் ஒன்றில் இருந்து ஸ்வீட்டியை எனது கணவர் எடுத்துவந்தார். அப்போது இருந்து, ஸ்வீட்டியை எனது பிள்ளை போன்று பார்த்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் இந்த திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here