தமிழக அரசு வேலைக்காக  67.23 லட்சம் பேர் காத்திருக்காங்களா? தமிழக அரசின் புதிய தகவல்..!

0
Are 67.23 lakh people waiting for Tamil Nadu government jobs Tamilnadu government new information-Tamil Nadu Government To Release For Government People

அரசு வேலை என்றால் யாருக்குதான் பிடிக்காது. அரசு வேலைக்காக எப்போது அறிவிப்பு வரும் என்று காத்துகொண்டிருப்பவர்கள் பலர். இந்நிலையில், தமிழக அரசு தற்பொழுது இந்த வேலைவாய்ப்பு பற்றி புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் அரசு வேலைக்காக சுமார் 67.23 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் வரையில் மட்டும் அரசு வேலைக்காக விண்ணப்பித்தவர்களின் விபரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் சுமார் 67.23 லட்சம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர். அரசு வேலைக்காக பதிவு செய்தவர்களில் ஆண்கள் பிரிவில் 31 லட்சத்து 40 ஆயிரம் பேரும், பெண்கள் பிரிவில் 35 லட்சத்து 82 ஆயிரம் பெரும் மற்றும் மூன்றாம் பாலினத்தவ்ர்கள் 268பெரும் பதவு செய்துள்ளனர்.

அரசு வேலைக்கு பதிவு செய்தவர்களில் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் மட்டும் சுமார் 18 லட்சத்து 48 ஆயிரம் பேரும், காத்திருப்போர் பட்டியலில் 19 வயது முதல் 30 வயதுள்ளவர்கள் 28 லட்சத்து 9 ஆயிரம் பேரும், 31 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18 லட்சத்து 30 ஆயிரம் பேரும், 46 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 30 ஆயிரம் பேரும், 60 வயதுக்கும் மேற்பட்டோர் 5 ஆயிரத்து 602 பேரும் பதிவு செய்துள்ளனர். மேலும், அரசு வேலைக்காக காத்திருப்போரில் மாற்றுத்திறனாளிகள் மட்டும் 1 லட்சத்து 42ஆயிரம் பேராகும்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here