சேலம் அரசு மருத்துவமனையில் இத்தனை வசதிகளா? பொதுமக்கள் மகிழ்ச்சி..

Are all the facilities available at Salem Government Hospital People are happy-Salem Government Hospital

சேலம் அரசு மருத்துவமனையில் புதிதாக 10 கட்டண பிரிவுக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 75 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இதில் தனியார் மருத்துவமனையை விட கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சென்னைக்கு வெளியே முதன் முதலில் சேலத்தில்தான் பே வார்டுஸ் துவங்கப்பட்டுள்ளதாகவும், இதனை தொடர்ந்து மதுரை மற்றும் கோவையில் துவங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்த அவர் மக்கள் மத்தியில் தனியார் மருத்துவமனை மீதான மோகத்தை குறைக்கவே தமிழக அரசு பே வாட்டுஸ் எனும் நடைமுறையை கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் நாடு முழுவதும் தேசிய அளவில் குடற்புழு நீக்க தினம் அனுசரிக்கப்படுவதற்கு முதன் முதலில் வித்திட்டது திமுக அரசுதான்.

மேலும் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தமிழகம் முழுவதும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க உள்ளதாகவும், இதற்காக ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 620 இடங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 2.69 கோடி பேர் பயன்பெற உள்ளதாகவும் தெரிவித்த அவர் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியில் 1.30 லட்சம் பணியாளர்கள் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here