பொது இடங்களிலும் இனி மாஸ்க் கட்டாயம்? அமைச்சர் கொடுத்த பேட்டி…

Are masks mandatory in public places The interview given by the minister

சென்னையில் உள்ள மருத்துவ முகாமை இன்று தொடங்கி வைத்தார். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் தமிழ்நாடு முன்னிலை பெற்றுள்ளது எனவும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியும்,மக்கள் நல்வாழ்வுத்துறையும் இணைந்து தொடர்ந்து பல மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது எனவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தற்பொழுது கொரோனா அதிகரித்து வருவதால் அனைத்து இடங்களிலும் முககவசம் கட்டாயமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தமிழகத்தில் அதிக அளவில் பாதிப்புகள் ஏதும் இல்லை. மருத்துமனைகளில் முககவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை. தேவைப்படும் போது அதுகுறித்து தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN