சென்னையிலிருந்து இதுவரை இத்தனை லட்சம் பேர் பயணமா? அதிர்ச்சி தகவல்!

Are so many lakhs of people traveling from Chennai Shocking information-Pongal Special Buses

தை திருநாளாம் பொங்கல் திருநாள் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாக கொண்டாடபப்டுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளிநாடு மற்றும் வெளியூர்களுக்கு சென்று வேலை செய்பவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கம்.

நாளை பொங்கல் பண்டிகை என்பதால் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுவதால் தொடர் விடுமுறையின் காரணமாக குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்கினறனர். இதனால் பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.

சென்னையிலிருந்து இயக்கப்படும் 6,796 சிறப்புப் பஸ்களில் இதுவரை 3.94 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து பொங்கல் சிறப்புப் பஸ்களில் செல்ல இதுவரை 1.78 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்று சென்னையில் இருந்து 2,100 தினசரி பஸ்களுடன் 2,010 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here