12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற & தேர்ச்சி பெறாத மாணவர்களா நீங்கள்? இதோ உங்களுக்காக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அட்டகாசமான திட்டம்!!

Are you a 12th pass & fail student Here is a great program released by the Department of School Education for you full details here watch immediately

தமிழகத்தில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தற்பொழுது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் தற்பொழுது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தற்பொழுது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் என அனைவருக்கும் ஒரு புதிய திட்டத்தினை பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்த உள்ளது. இந்த புதிய திட்டத்தில், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வி பயில எந்த துறையை தேர்வு செய்வது என்று குழப்பத்தில் உள்ளனர். அவ்வாறு இருக்கும் மாணவர்களுக்கு உதவி மையம் ஒன்றை அமைத்துள்ளது. இந்த உதவி மைத்தில் மாணவர்கள் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை கேட்டு சரியான துறையை தேர்வு செய்து உயர்கல்வி பயில வழிவகை செய்கிறது. இந்த உதவி மையம் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் குடும்ப வறுமையால் தங்களின் பிள்ளைகளை உயர்கல்வி அனுப்ப முடியாத பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்க உள்ளது.

மேலும், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் இந்த உதவி மையம் மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது. தேர்ச்சி பெறாத மாணவர்கள் அடுத்த ஆண்டு வரை காத்திருக்காமல் வரும் ஆண்டிலேயே தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதற்கான அனைத்து ஆலோசனைகளும் அவர்களுக்கு இந்த உதவி மையம் மூலம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத்தேர்வு பற்றிய முழு விவரங்கள் அறிய www.dge.tn.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN