சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.
இந்த திரைப்படத்திற்கு “ஜெயிலர்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பார்வையை இன்று வெளியிட்டுள்ளனர். இன்று முதல் (ஆகஸ்ட் 22) படபிடிப்பு துவங்குவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கண்ணாடி அணிந்து மாறுபட்ட தோற்றத்தில் ரஜினிகாந்த் காணப்படுகிறார்.
இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிக்கப்போகும் நடிகர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வந்த நிலையில் முறையாக எந்த அறிவிப்பும் வரவில்லை.
ரசிகர்கள் அனைவரும் ‘ஜெயிலர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கண்டு களியுங்கள்.