ரேசன் கார்டு வைத்திருப்பவர்களா நீங்க? அப்ப உடனே இதை கவனியுங்க! மத்திய அரசின் புதிய அறிவிப்பு..!

0
Are you a ration card holder Then take care of this immediately Central government's new notification-Ration Card Holder For New

ரேசன் கார்டுகளை வைத்து ரேசன் கடைகளில் பொருட்களை வாங்குவது வழக்கம். ஆனால் தற்பொழுது ரேசன் கார்டுதாரர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவித்த இந்த புதிய அறிவிப்பு, அரசின் இலவச ரேஷன் வசதியை தகுதியற்ற பலர் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இலவச ரேசன் கார்டு பயன்படுத்தும் அனைவரும் மத்திய அரசின் அறிவிப்பின்படி, அவர்களின் வெரிஃபிகேஷனை பெற்று கொள்ள வேண்டும். வெரிஃபிகேஷனில் நீங்கள் தகுதியற்றவர் என கண்டறியப்பட்டால் உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.

இந்த ரேசன் கார்டு வெரிஃபிகேஷனை பெறுவதற்கான கால அவகாசம் 30 நாட்கள் என தெரிவித்துள்ளது. மேலும், புதிய வழிமுறைகளை பின்பற்றாத பயனாளிகளின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரசு மேற்கொண்ட இந்த முறையின் மூலம் தகுதியற்ற ரேஷன் கார்டுகளை ரத்து செய்து வருவதாகவும் அதுமட்டுமல்லாமல் இதுவரை சுமார் 2 கோடியே 41 லட்சம் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலானவை உ.பியில் உள்ள ரேசன் கார்டுகளாகும். இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசாக ஒவ்வொறு ரேசன் கார்டுகளுக்கும் 1000 ரூபாய் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here