சோசியல் மீடியா பயன்படுத்துபவரா நீங்கள்? இன்னும் 3 மாசம் தான், மத்திய அரசின் கெடு!

Central Government imposed penalty To Social Media: இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சோசியல் மீடியாக்களில் நிறைய விரும்பதகாத கருத்துக்களை பதிவிடுகின்றனர். இத்தகைய விரும்பதகாத கருத்துக்கள் பதிவேற்றம் செய்யும் நபர்கள் மீது யூஸர்கள் அளிக்கும் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட நிறுவனம் எடுக்கவில்லை.

Central Government Imposed Penalty To Social Media

Are you a social media user Only 3 months left for the central government-Central Government imposed penalty To Social Media
Central Government Imposed Penalty To Social Media

இந்நிலையில்தான், மத்திய அரசு இதனை பற்றி ஒரு அரசானை வெளியிட்டது. அதில், சோசியல் மீடியாக்களுக்கான தகவல் தொழில்நுட்ப (ஐடி) விதிகளில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் சில திருத்தங்களை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த திருத்தங்களின் அடிப்படையில், சமூக ஊடகங்கள் மீது வரும் புகார்களை ஆய்வு செய்து தீர்வு காண்பதற்காக 3 நபர்களைக் கொண்ட “குறைகள் மேல்முறையீட்டுக் குழுவை” 3 மாதத்தில் அமைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகள் திறந்த மற்றும் பாதுகாப்பான #DigitalNagriks-க்கான நமது அரசாங்கத்தின் கடமையை உணர்ந்து கொள்வதற்கான அடுத்த படியாகும். இணையத்தை பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் மாற்ற வேண்டும் எனவும் அரசு மற்றும் சோசியல் மீடியா தளங்கள் இடையே கூட்டாண்மையை உருவாக்க உள்ளதாகவும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களின் மீது கூறப்படும் புகார்களை பெறுவதற்கு குறைகள் மேல்முறையீட்டுக் குழுவை அமைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்த நிலையில், இந்த குழுவில் 3 பேர் பணியாற்றுவர். அதில், ஒருவர் தலைவராகவும் மற்ற இருவர் முழுநேர உறுப்பினர்கள் ஆவர். மூவரில் ஒருவர் முன்னாள் அரசு அதிகாரியாகவும், இருவர் தன்னிச்சையானவர்களாகவும் இருப்பார்கள்.

இந்நிலையில், யூஸர்களிடமிருந்து பெறப்படும் புகார்களை 24 மணி நேரத்திற்குள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கான தீர்வை அடித்த 15 நாட்கள் அல்லது 72 மணி நேரத்திற்குள் அளிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வன்முறையை தூண்டும் விதத்தில் மதம் சம்பந்தப்பட்ட கருத்துக்கள், ஆபாசப் படங்கள், நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விஷயங்கள் போன்றவை சம்பந்தப்பட்ட புகார்களுக்கு உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, சமூக ஊடகங்களின் மீது யூஸர்கள் அளிக்கும் புகார்களை தீர்வு காண்பதற்கான அதிகாரியை நியமிப்பதற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருத்தம் செய்யப்பட்டது. தற்போது தகவல் தொழில்நுட்ப (IT) விதிகள் திருத்தம் செய்யப்பட்டு குறைகளை 2021-யில் மேல்முறையீடு குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here