ட்விட்டர் பயன்படுத்துபவர்களா நீங்கள்? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்! எலான் மஸ்க்கின் அதிரடி நடவடிக்கை

Are you a Twitter user A shocking news for you Action by Elon Musk-Twitter New Announcement

உலகம் முழுவதும் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக கருதப்படுவது ட்விட்டர் செயலியாகும். தற்பொழுது இந்த ட்விட்டர் நிறுவனத்தை உலகின் மிக பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமீபத்தில் கையகப்படுத்தினார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்துக்கு உரிமையாளரானதை தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் ‘புளூ டிக்’ பயன்படுத்துகின்றனர். இந்த புளூ டிக் டுவிட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ளும். ட்விட்டர் செயலியில் உள்ள அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான ‘ப்ளூ டிக்’ வசதிக்களுக்கு இனி மாதந்தோறும் 1,600 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் டுவிட்டர் சார்பில் வெளியிடப்படவில்லை.

இதனை தொடர்ந்து, ‘ப்ளூ டிக்’ வசதிகளுக்கு கட்டணம் வசூலிப்பதை எதிர்த்த அமெரிக்க நாவலாசிரியர் ஸ்டிபன் கிங் இது தொடர்பாக டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு புளூ டிக்கிற்கு 20 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டுமா ?. நீங்கள் தான் எனக்கு பணம் தர வேண்டும்” என தெரிவித்தார்.

இதற்கு டுவிட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில், நாங்களும் கட்டணம் (பில்) செலுத்த வேண்டும் என்றும் விளம்பரதாரர்களை மட்டுமே டுவிட்டர் முழுமையாக நம்பியிருக்க முடியாது. 8 டாலர் என்றால் செலுத்துவீர்களா” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இனி ‘புளூ டிக்கிற்கு’ மாதம் 8 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 660 ரூபாய் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் கட்டணம் செலுத்துவோர், வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்திற்கு பதிவுசெய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here