ஆதார் அட்டை வைத்திருப்பவர்களா நீங்க? உடனே இதை செய்யுங்க! மத்திய அரசின் புதிய அறிவிப்பு..!

0
Are you aadhar card holder Do this now Central government's new announcement-Aadhaar Card Renewal Once In 10 Years

தற்பொழுது உள்ள சூழ்நிலையில் ஆதார் அடையாள அட்டையானது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. வங்கி கணக்கு மற்றும் PAN கார்டு போன்றவை அதார் எண்னுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு முகமை யு.ஐ.டிஏ.ஐ., சார்பில் அடையாள அட்டை பற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், 10 ஆண்டுகளுக்கு முன் ஆதார் அடையாள அட்டை வைத்திருப்போர் தற்பொழுது வரை எந்தவொரு புதிய விவரமும் சேர்க்காத நிலையில் இந்த திட்டத்தின் மூலம் அதனை உடனடியாக சேர்க்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விவரங்களை அடையாள அட்டையில் சேர்ப்பதற்கு ஆன்லைனில் உள்ள ‘மை ஆதார்’ இணையதளம் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள ஆதார் மையம் மூலமாகவோ சேர்க்கலாம்.

மேலும், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் பயோமெட்ரிக் தகவல்கள், விவரங்களைப் புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்த இந்த அறிவிப்பால் ஆதார் அட்டை மூலமாக நடைபெறும் மோசடிகளைத் தவிர்க்க முடியும். அது மட்டுமல்லாமல் நாடுமுழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இனிமேல் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழுடன் சேர்ந்து, ஆதார் அட்டையும் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் அடுத்த சில மாதங்களில் அமலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here