பொதுவிநியோக திட்டத்தின் மூலம் மக்களுக்கு ரேஷன் கடைகளில் மலிவான விலைக்கு அரிசி பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் ரேஷன் கடைகள் மூலமாகத்தான் அரசின் அனைத்து விதமான நலத்திட்டங்களும் மக்களை சென்றடைகிறது. அந்த வகையில், வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ள மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களும் ரேஷன் கடைகள் மூலமாகத் தான் மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்ட பணிகளுக்காக கடந்த ஜூலை 30 ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று அரசு அறிவித்தது. இந்த வேலை நாளை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 26ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது.
Also Read : ரேஷன் கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்..! சற்றுமுன் வெளியான தமிழக அரசின் புதிய அரசாணை!!
அதன்படி, நாளையும்(ஆகஸ்ட் 26) நாளை மறுநாளும்(ஆகஸ்ட் 27) தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் அடுத்து இரண்டு நாட்களுக்கு ரேஷன் கடைகள் விடுமுறையில் இருக்கும் என்றும், பொதுமக்கள் விடுமுறை தினங்களில் ரேஷன் கடைகளுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.