ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்! இனி இதற்கும் கூடுதல் கட்டணமா?

Are you an online shopper A shocking news for you Is there an additional charge for this-Flipkart Announces Extra Charge For Cash On Delivery

தற்பொழுது உள்ள சூழ்நிலையில் அனைவரும் ஆன்லைன் ஷாப்பிங்கை தான் விரும்புகிறனர். ஒவ்வொறு முறையும் ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போதும் அதற்கான டெலிவிரி கட்டணத்தை செலுத்துவது வழக்கம். ஆனால் தற்பொழுது ஆன்லைன் ஆர்டர்களுக்கான கூடுதலாக டெலிவிரி கட்டணத்தை வசூலிக்கபோவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாக உள்ள ஃப்ளிப்கார்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் அறிவித்துள்ள அறிவிப்பில் ஃப்ளிப்கார்ட் மூலம் பெறப்படும் டெலிவரிகளுக்கு வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும் எனவும் ப்ரீபெய்டு ஆர்டர்களுக்கு வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை என்றும் கூறியுள்ளது.

இதற்குமுன் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மூலம் பெறப்படும் ஆர்டரின் மதிப்பு ரூ.500க்கு குறைவாக இருந்தால் அதனுடைய டெலிவரி கட்டணம் ஒரு பொருளுக்கு ரூ.40 என வசூலிக்கப்பட்டது. ஆர்டரின் மதிப்பு ரூ.500க்கு அதிகமாக ஆர்டர்கள் செய்யப்பட்டால் அதற்கு எந்தவொரு டெலிவரி கட்டணமின்றி இலவசமாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்பொழுது ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அதனுடைய அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தில், டெலிவரி கட்டணங்கள் மறைக்கப்பட்ட கட்டணங்கள் அல்ல என்றும் விற்பனையாளரின் ஷிப்பிங் பாலிசியை பொறுத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மூலம் பெறப்படும் ஆர்டர்கள் கேஷ் ஆன் டெலிவரியாக இருக்கும் பட்சத்தில் எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாத நிலையில், தற்பொழுது சிஓடி பாலிசியின்படி, ரூ.150 அல்லது ரூ.15,000 மதிப்பில் ஒரு பொருளை ஆர்டர் செய்தாலும் டெலிவரி கட்டணத்துடன் சேர்த்து ஒரு ஆர்டருக்கு ரூ.5 செலுத்த வேண்டும் என்று ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022 நிதியாண்டில் இ-சில்லறை விற்பனையாளரின் நிகர இழப்பு 51 சதவீதம் அதிகரித்து ரூ.4,362 கோடியாக இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here