கோடைக்கால சீசனுக்கு ஊட்டி போறீங்களா? அட்டகாசமான மலர் கண்காட்சி ஆரம்பிக்க போறாங்க! எப்போ தெரியுமா?

தமிழ் நாட்டில் இருக்கும் நீலகிரி மாவட்டமானது மலைகளின் அரசி என அழைக்கப்படுகிறது. இது மலைகள் சூழ்ந்துள்ள இடமாக இருப்பதால் ஏராளாமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.

கோடைக்கால சீசனுக்கு ஊட்டி போறீங்களா அட்டகாசமான மலர் கண்காட்சி

அதுவும் தற்போது கோடைகாலமாக இருப்பதினால் அங்கு இதமான காலநிலை நிலவுகின்றது. அதுவுமல்லாது இங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு களிப்பதற்காகவும் வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டினுடைய மற்ற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் வருகை புரிகின்றனர்.

மேலும் இங்கு வருடந்தோறும் மே மாதத்தின் போது சர்வதேச அளவில் புகழ்பெற்ற மலர் கண்காட்சி நடத்தப்படும். இந்த மலர் கண்காட்சியானது அங்குள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறுகிறது. இந்த பூங்கா நூற்றாண்டு பழமை வாய்ந்ததாகும். மேலும் கடந்த வருடத்தின்போது ஏறக்குறைய 7½ லட்சம் சுற்றுலாப்பயணிகள் கோடை சீசனின்போது வந்திருந்தனர். தொடர்ந்து தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் ஆகிய விடுமுறை நாட்களில் இரண்டாவது சீசனானது தொடங்கினது. அப்பொழுதும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் களைகட்டியது.

இதனையடுத்து இந்த வருடத்தில் மலர் கண்காட்சியானது வருகின்ற மே-19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடர்ந்து கண்காட்சிக்காக வர்ணம் தீட்டுதல் , மலர் நாற்றுகள் நடுதல் மற்றும் மேடை அமைத்தல் போன்ற பணிகள் அதி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது பூங்கா நிர்வாகத்தினர் இப்பணிகள் அனைத்தும் ஒரு வாரத்துக்குள் முடிக்க ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தார்கள்.

மேலும் வரும் மே-13 இல் ரோஜா கண்காட்சியானது அங்குள்ள ரோஜா பூங்காவில் துவங்கப்பட இருக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் கண்காட்சியை திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN