TNPSC எக்ஸாம் எழுதப் போறீங்களா? முக்கியமான அறிவிப்பு வந்திருக்கு… மிஸ் பண்ணாம பாருங்க!

Are you going to appear for NPSC Exam An important announcement has arrived Dont miss it-TNPSC Released Admit Cards

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாட்டில் உள்ள அரசு காலிபணியிடங்களை நிரப்புவதற்கு பல்வேறு தேர்வு முறைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது ஒரு புதிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில், டிஎன்பிஎஸ்சி மொத்தம் 1089 காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் 789 காலி பணியிடங்கள் நில அளவையர் பிரிவிலும், 236 காலி பணியிடங்கள் வரைவாளர் பிரிவிலும், 55 காலி பணியிடங்கள் சர்வேயர்கள் பிரிவிலும் நிரப்ப உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த காலியிட பணிகளை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை நவம்பர் 6 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வு இரண்டு நாட்கள் நடைபெறும். இதில் முதல் நாள் காலை 9.30 மணியில் இருந்து மதியம் 12.30 வரையும் நடைபெறும். இரண்டாம் நாள் மதியம் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரையிலும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, இந்த எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டை டிஎன்பிஎஸ்சி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தின் (tnpsc.gov.in) மூலம் பெற்றுகொள்ளாலாம் என்று தெரிவித்துள்ளது. மொத்தம் 1089 காலி பணியிடங்களில் உள்ள பல்வேறு பதவிகளுக்காக விண்ணப்பித்துள்ள தேர்வாளர்கள் தங்களின் தேர்வு நுழைவுச்சீட்டை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

நுழைவுச்சீட்டை பெறுவதற்கான விதிமுறைகள்:

1. டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in என்ற பக்கத்திற்கு சென்று அதில் Candidates Corners என்ற பகுதியில் இருக்கும் ‘Registered User’ என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.

2. அதில் Already Registered என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்து உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிடவும்.

3. இதை குறிப்பிட்ட பிறகு, Admit Card இணைப்பைக் கிளிக் செய்து தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பதையும் சரிபார்த்து அதன்பின் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

இந்த நுழைவுச்சீட்டு பதிவிறக்கத்தில் ஒரு முறை பதிவு என்ற முறையையே பின்பற்றப்படும். இதில், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடுவதன் மூலம் விண்ணப்பதாரரின் ஒரு முறை பதிவு (OTR டாஷ்போர்டு) நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here