தமிழ்நாட்டில் பொதுவிநியோக திட்டத்தின் மூலம் நியாய விலை கடைகளில் பொதுமக்களின் அத்தியாவசிய பொருளான அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மலிவான விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அரசு வழங்கும் இந்த அத்தியாவசிய பொருட்களை வாங்க குடும்ப அட்டை என்று சொல்லப்படும் ரேஷன் கார்டு தேவை. இந்த ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும். இந்த ரேஷன் கார்டை பயன்படுத்தி ஒவ்வொரு மாதமும் நியாய விலை கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 2.24 கோடி ரேஷன் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்பொழுது புதிய ரேஷன் கார்டை பெற விண்ணபித்து வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதில், அதிகாரிகள் விண்ணப்பத்தாரர்களின் வீடுகளுக்கே சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, கிச்சன் ஒன்று உள்ளதா? அல்லது 2 உள்ளதா? அடுப்பு ஒரு அடுப்பா? 2 அடுப்பா? யார் பெயரில் உள்ளது? ஒரு கேஸ் சிலிண்டரா? 2 கேஸ் சிலிண்டரா? அது யார் பெயர்களில் உள்ளது? என்பதையெல்லாம் நேரில் சென்று ஆய்வு நடத்தி அதன்பின் அதில் எந்த விண்ணப்பதாரர்கள் தகுதியாவர்கள் என்பதை கண்டறிந்து அதன்பின்தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெயவித்துள்ளனர்.