நம் நாட்டில் பல வருடங்களாக ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ரேஷன் கடைகளின் மூலமாக அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் குறைந்த விலைக்கு தரப்படுகிறது. அதுமட்டுமல்லாது கொரோனா ஊரடங்கின்போது அடித்தட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தையும் அரசு கொண்டு வந்தது. அத்திட்டம் இன்று வரையும் தொடங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் பெற வேண்டுமென்றால் மக்கள் அனைவரும் ரேஷன் கார்டு வைத்திருப்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
மேலும் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் மற்றும் தேவைப்படுவோர்கள் அனைவரும் அந்தந்த மாநில அரசினுடைய இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். அதாவது தமிழகத்தில் இருப்பவர்கள் ரேஷன் கார்டை பெற வேண்டுமென்றால் https://tnpds.gov.in/ என்ற தமிழக அரசினுடைய இணையதளத்தில் சென்று விண்ணப்பித்தால் போதும். இதே போல மற்ற மாநிலங்களிலும் அந்தந்த அரசுக்குரிய இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பத்தின்போது வருமான விபரம், பெயர் மற்றும் முகவரி போன்றவற்றை அளிக்க வேண்டும். அதுமட்டுமல்லாது வாக்காளர் அடையாள அட்டை, அல்லது ஆதார் கார்டு ஆகிய முக்கிய ஆவணங்கள் ஆன்லைன் ரேஷன் கார்டிற்காக விண்ணப்பித்தால் தேவைப்படும். இதனுடன் வருமானச் சான்றிதழும் தேவைப்படும். ஆதார் கார்டு, பான் கார்டைப் போலவே ரேஷன் கார்டும் மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது மாநில அரசுகளுக்கே ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் உரிமை உள்ளது. எனவே மாநில அரசின் கீழேயே ரேஷன் கார்டை தயாரிக்கும் பணிகளும் வருகின்றது.
இதனையடுத்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:
தற்போது QR கோடானது தமிழகத்தில் இருக்கும் ரேஷன் கடைகளில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்களை QR கோடு மூலம் ஸ்கேன் செய்து பெற்றுக் கொள்ளும் திட்டம் தமிழகத்திலேயே முதன் முதலாக நீலகிரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டிருக்கின்றது. க்யூ ஆர் கோட் சிஸ்டம் பொருட்களின் தரத்தை அறிந்து கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
மொத்தம் 14 லட்சத்து 20 ஆயிரம் புதிய ரேஷன் அட்டைகள் தமிழகத்தில் மட்டும் அளிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலை வேணுமா? கிளெர்க் வேலை வேணுமா? தமிழ்நாடு அரசு அட்டகாசமான வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது!
- 10வது படித்தவர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் தமிழ்நாடு அரசு வேலை வந்தாச்சு! இன்னைக்கே அப்ளை பண்ணிடுங்க!
- ஆபீஸ் அசிஸ்டன்ட், கிளெர்க், ரிசப்ஷனிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைக்கு தமிழக அரசில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
- பல்வேறு பணியிடங்களை வெளியிட்டுள்ளது பெல் நிறுவனம்! நேர்காணலில் மத்திய அரசு வேலை ரெடி!
- கவர்மெண்ட் வேலை பாக்குற உங்களுக்குத்தான் இந்த மகிழ்ச்சியான செய்தி! சம்பளம் அதிகமா தராங்களாம்!