என்னைக்கு ஸ்கூல் திறக்க போறாங்க? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிக்க உள்ளார்!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிவடைய உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது? என்ற கேள்வி எழுந்து வந்தது.

Are you going to open a school for me Minister Anbil Mahesh is going to announce! read here

இந்நிலையில், தமிழகத்தில் 6 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு வரையில் ஜூன் 1 ஆம் தேதியும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஜூன் 5 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். தற்பொழுது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பது பற்றி அதிகாரிகள் எடுத்துரைத்தாக கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அந்த கூட்டத்தில் ஆலோசித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிக்க உள்ளார்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN