திருப்பதி கோவிலுக்கு போறவங்களா நீங்க? அப்ப உடனே இதை கவனியுங்க!

0
Are you going to Tirupati temple Then take care of this immediately-Tirupati Temple Tomorrow Released Booking Tickets

ஆந்திர மாநிலத்தில் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவில் உலகத்தின் பணக்கார கோவில்களில் ஒன்றாக கூறப்படுகிறது. இந்நிலையில், டிசம்பர் மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் ஆர்ஜித சேவையில் பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

இதற்கான டிக்கெட்டுகள் நாளை ((புதன்கிழமை) காலை 10 மணியளவில் இணையதளத்தில் வெளியிடப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், பக்தர்கள் தங்களுக்கு தேவையான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளாலாம்.

இந்நிலையில், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தவர்கள் அந்தந்த தேதிகளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துகொள்ளலாம். இதற்கான அறிவிப்பை திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here