திருப்பதி கோவிலுக்கு போறீங்களா? அப்ப உடனே இத பாருங்க…! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!

0
Are you going to Tirupati temple Then watch this right away The announcement made by Devasthanam-Tirupati Temple Angapradaksana Token Released On Tomorrow

ஆந்திர மாநிலத்தில் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவில் உலகத்தின் பணக்கார கோவில்களில் ஒன்றாக கூறப்படுகிறது. திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று சொல்வார்கள். இந்நிலையில் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகை தருகிறனர்.

அந்த வகையில், மாதந்தோறும் திருப்பதி எழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்கு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், டிசம்பர் மாதம் தரிசனம் செய்வதற்கான தரிசன டிக்கெட் மற்றும் அங்கப்பிரதட்சண டோக்கன் ஆகியவை நவம்பர் 25 ஆம் தேதி (நாளை) இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான தரிசன டிக்கெட் இணையதளத்தில் வெளியிடபப்டுவதாக தெரிவித்திருந்த நிலையில், நாளை காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் அந்தந்த நாளில் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து கொள்ளாலாம்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here