திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க போறீங்களா? அப்ப இந்த ஷாக் நியூஸ் உங்களுக்குத்தான்!!

Are you going to visit Tirupati Seven Mountain Elephant Then this shock news is for you read it now

ஆந்திராவில் இருக்கும் திருப்பதி மலையானது புகழ் பெற்ற ஒரு இந்து தேவஸ்தானமாக விளங்குகின்றது.இங்கு ஆண்டு முழுவதும் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். இத்தரிசனத்திற்கென்று பல்வேறான விலைகளில் டிக்கெட்டுகளும் வழங்கப்படுகின்றன.

இதனைத் தொடர்ந்து தேவஸ்தானமானது 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைன் வழியாக திருப்பதி மலைக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு விற்பனை செய்கின்றது. அதுமட்டுமல்லாது திருமலை திருப்பதி தேவஸ்தானமானது முன்னுரிமை அடிப்படையில் இந்திய சுற்றுலாத் துறை மற்றும் மாநில சுற்றுலா அபிவிருத்தி கழகங்களுக்கு 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை ஒதுக்கீடு செய்கிறது. மேலும் மாநில சுற்றுலா அபிவிருத்தி கழகங்களாக ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்கள் காணப்படுகிறது.

தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு சில பக்தர்கள் தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடையாக அளிக்கின்றனர். இவ்வகையான பக்தர்களுக்கு மட்டுமே 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி தரிசன டிக்கெட்டுகள் அளிக்கப்படுகின்றது. அதுமட்டுமல்லாது விஐபி பிரேக் தரிசனமானது பக்தர்களுக்கு 500 ரூபாய் கட்டணத்தில் முக்கிய பிரமுகர்களுடைய பரிந்துரை கடிதங்களின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன.

மேலும் இந்த கோடைகாலத்தில் இலவச தரிசனத்திற்காக சாதாரண பக்தர்கள் திருப்பதி மலைக்கு அதிகளவிற்கு வர தொடங்குகின்றனர். இதனால் சுற்றுலா அபிவிருத்தி கழகங்களுக்கு வழங்கப்படும் டிக்கெட்டுகளானது சாதாரண பக்தர்களுக்கென்று 60% வரை குறைத்திருக்கிறது.

இதனையடுத்து தற்போது விஐபி பிரேக் தரிசன அனுமதியானது மிக முக்கிய பக்தர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றது. மேலும் அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை அனைத்து முக்கிய பக்தர்களும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு விஐபி பிரேக் தரிசன வசதிக்கான அனுப்பப்படுகிற பரிந்துரைக்கான கடிதங்களை ஏற்றுக்கொள்ளாது என்றும் தேவஸ்தானமானது தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக ஏழுமலையானை சாதாரண பக்தர்களாக இருக்கும் 10,000 க்கும் மேற்பட்டவர்கள் தினமும் கூடுதலாக வழிபட்டு வருகிறார்கள்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN