நீட் தேர்வு எழுத போறீங்களா..? அப்ப இந்த செய்தி உங்களுக்குத்தான்!! உடனே பாருங்க…

Are you going to write the NEET exam Then this news is for you Watch now

இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (NEET UG) விண்ணப்பிக்க இன்றே (ஏப்ரல் 6) கடைசி நாள் என்பதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவுச் செயல்முறை தற்போது நடந்து வருகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இன்று (ஏப்ரல் 6). எனவே விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதனிடையே நீட் தேர்வு விண்ணப்பத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பத் திருத்தச் சாளரம் விரைவில் திறக்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மருத்துவ விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://neet.nta.nic.in/ இல் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் மாற்றங்களைச் செய்யலாம் எனவும் இதுகுறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN