நவம்பர் 19 ஆம் தேதி TNPSC குரூப்-1 எக்ஸாம் எழுத போறீங்களா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!

0
Are you going to write TNPSC Group-1 Exam on 19th November 2022 A good news for you! Please Check Now

கோவை, நவ 10:

கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகள் நவம்பர் 13, 15 ஆகிய ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1 தேர்வு நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் நவம்பர் 13, 15 ஆகிய தேதிகளில் இலவச மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. காலை 10 முதல் நண்பகல் 1 மணி வரை மாதிரி தேர்வும், நண்பகல் 1 மணி முதல் 2 மணி வரை மாதிரி தேர்வுக்கான மதிப்பாய்வும் நடத்தப்பட்டு உடனடியாக மதிப்பெண்கள் வழங்கப்படும்.

எனவே மாதிரி தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் studycirclecbe@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தேர்வுக்கூட அனுமதி சீட்டை அனுப்பிவைத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் மாதிரி தேர்வுக்கு தேர்வுக்கூட அனுமதி சீட்டு கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படும். இந்த மாதிரி தேர்வு முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது.

இலவச மாதிரி தேர்வுகள் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு தொழில்பயிற்சி வளாகத்தில் செயல்படும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. எனவே அரசு வேலைக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SOURCE LINK


RECENT POSTS:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here