
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16 ஆயிரத்து 895 பஸ்கள் இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருந்தார். அதோடு தீபாவளி பண்டிகையை தொடர்ந்து இந்த ஆண்டு 5.90 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.9 முதல் மூன்று நாட்கள் மற்றும் நவ.13 முதல் 15 வரை மூன்று நாட்கள் சிறப்பு பஸ்கள் உட்பட ஒட்டு மொத்தமாக 30,187 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்து உள்ளார்.
தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதில் கலந்து கொண்டார். அதோடு போக்குவரத்துக் கழக செயலர் பணீந்திர ரெட்டி, சிறப்பு செயலர் வெங்கடேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின் அவர் அளித்த பேட்டியில் கூறியது:
” தீபாவளிக்கு சென்னையில் உள்ள மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக நவ. 9 முதல் 11 வரை, தினசரி இயக்கப்படும் 2,100 பஸ்களுடன், 4,675 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
மேலும் மூன்று நாட்களுக்கு ஒட்டு மொத்தமாக 10,975 பஸ்கள், பிற முக்கிய ஊர்களில் இருந்து, பல்வேறு ஊர்களுக்கு 5,920 சிறப்பு பஸ்கள் என, மொத்தமாக 1616,895 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
Also Read >> மீண்டும் ஹாரரில் மிரட்ட வரும் ஹன்சிகா… வெளியானது கார்டியன் மூவி டீசர்…!
அதோடு தீபாவளிக்கு பின் ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப நவ. 13 முதல் 15 வரை, தினசரி இயக்கப்படும் 2,100 பஸ்களுடன், 3,167 சிறப்பு பஸ்கள் சேர்த்து, ஒட்டுமொத்தமாக 9,467 பஸ்கள், பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,825 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 13,292 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
வழித்தட மாற்றம்…
அரசு விரைவு பஸ்களில், அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான பஸ்கள், கோயம்பேடில் இருந்து பூந்தமல்லி, பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெளி வட்ட சாலை, வண்டலுார் வழியே செல்லும்.
கிளாம்பாக்கம் தற்காலிக பஸ் நிறுத்தத்தில், தாம்பரம் மற்றும் பெருங்களத்துாரில் இருந்து பயணம் மேற்கொள்ள…முன்பதிவு செய்த பயணியரை ஏற்ற வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
அதோடு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், தாம்பரம், பெருங்களத்துார் வழியாக செல்வதை தவிர்த்து, திருப்போரூர், செங்கல்பட்டு அல்லது வண்டலுார் வெளி வட்ட சாலை வழியாக செல்லலாம்.
முன்பதிவு மையங்கள்:
கோயம்பேடு பஸ் நிலையத்தில் 10, தாம்பரம் சானிட்டோரியம் பஸ் நிலையத்தில் ஒன்று என மொத்தம் 11 முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன. இவை காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை செயல்படும். மேலும் காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை செயல்படும். அதோடு சொந்த ஊர் செல்ல அரசு பஸ்களில் இதுவரை 70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர்.
மேலும், www.tnstc.in இணையதளம் வழியாகவும், tnstc மொபைல் ஆப்ஸ் வழியாகவும் முன்பதிவு செய்யலாம்” என்று அமைச்சர் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு 5.90 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.