பொங்கல் பண்டிகைக்கு நீங்களும் சொந்த ஊர் போறீங்களா..? அப்ப உடனே இத பாருங்க..

Are you going to your hometown for Pongal Then watch this immediately..-In Pongal Festivel 2 Lakh People Booked Buses

பொங்கல் பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் வசதிக்காக வருகிற 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் அரசு சார்பில் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், 4 நாட்களுக்கு 6,500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை 15-ந்தேதி – ஞாயிற்றுக்கிழமை வருவதால் பெரும்பாலானவர்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளிலேயே பயணத்தை தொடங்குவர். அதன் அடிப்படையில் வழக்கம்போல் சென்னையில் உள்ள 6 சிறப்பு பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்பட உள்ளது. ஆகையால், சொந்த ஊர் செல்ல இருப்பவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன்பதிவு செய்யத் தொடங்கிவிட்டனர்.

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்திலும் இருக்கைகள் நிரம்பி, பிற போக்குவரத்துக் கழக பஸ்கள் முன்பதிவில் இணைக்கப்பட்டு விறுவிறுப்பாக புக்கிங் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும், 13-ந்தேதி வெளியூர் செல்ல அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தற்போது வரை 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சுமார் 2 லட்சம் பேர் முன்பதிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அரசு பேருந்துகளைப் போல் ஆம்னி பேருந்துகளில் விறுவிறுப்பான முன்பதிவு நடக்கவில்லை என்றும் கூறுகின்றனர். 13-ந் தேதிக்கு மட்டும் 70 சதவீதம் ஆம்னி பஸ்கள் நிரம்பி இருப்பதாகவும், மற்ற நாட்களில் அதிக இடங்கள் காலியாக இருப்பதாகவும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறுகின்றனர். வழக்கமான அளவில் இயக்கப்படுகின்ற நிலை உள்ளது என்றும், கூடுதலாக விடுவதற்கு இதுவரையில் வாய்ப்பு இல்லை என்று ஆம்னி பேருந்துகள் சங்கத்தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அதேவேளையில் கட்டணம் குறைவாக இருப்பதாலும் பெரும்பாலானோர் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here