இந்த கோடை விடுமுறைக்கு ஏற்காடு போலான்னு பிளான் பண்ணிருக்கீங்களா? உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு!!

Are you planning to go to Yercaud for this summer vacation Good news for you District administrations action announcement dont miss and read immediately

பொதுவாகவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களின்போது கோடை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதற்கு முக்கியக் காரணம் அந்த மாதங்களில் எல்லாம் வெயில் வாட்டி வதைக்கும். எனவே மாணவர்களுடைய நலத்தினைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து அம்மாதங்களில் விடுமுறை அளிக்கப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது இந்த கோடை காலங்களில் ஏற்காடு, ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற இடங்களில் இதமான காலநிலை நிலவும். மேலும் தமிழகத்தில் இந்த இடங்கள் அனைத்தும் சுற்றுலாத்தலமாகவும் விளங்குகின்றது. எனவே மக்கள் அனைவரும் இந்த கோடை விடுமுறையை பயன்படுத்தி தங்களது குடும்பத்துடன் இது போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு செல்வதற்கு தயாராகின்றனர்.

இதனை அடுத்து இந்த சுற்றுலாத் தளங்களில் எல்லாம் மலர் கண்காட்சி மற்றும் கோடைவிழா போன்ற பல்வேறான நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன்படி சேலத்தில் உள்ள ஏற்காட்டில் கோடை விழாவானது இந்த வருடத்தில் மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதனை அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

இந்த ஏற்காட்டில் தாவரவியல் பூங்கா, ஏரி பூங்கா, ஜென்ட்ஸ் சீட், லேடீஸ் சீட், கரடியூர் வியூ பாயின்ட், ரோஸ் கார்டன், படகு இல்லம், அண்ணா பூங்கா, பக்கோடா பாயிண்ட் மற்றும் சேர்வராயன் கோவில் ஆகிய இடங்கள் சிறந்த சுற்றுலாப்பகுதியாக காணப்படுகிறது. மேலும் இந்தக இடங்கள் அனைத்தும் சுற்றுலாப்பயணிகள் அதிகம் பார்வையிடும் மற்றும் விரும்பப்படுகிற ஒரு சுற்றுலாப் பகுதியாக இருக்கின்றது. தொடர்ந்து சுற்றுலாப்பயணிகள் இங்கு அதிகளவில் வந்து செல்கின்றனர். அதைத்தொடர்ந்து இந்த மார்க்காக செல்லும் பாதைகளில் எல்லாம் கூட்ட நெரிசல் அதிகம் காணப்படுகின்றது.

அதுமட்டுமல்லாமல் இந்த ஏற்காடு கோடைவிழாவுடைய ஒரு பகுதியாக மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இது சிறப்பான ஒரு நிகழ்ச்சியாக நடத்தப்படும் என அறிவித்த நிலையில் சுற்றுலாப் பயணிகளுடைய எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN