are you tamil nadu civilians… this happy news for you
உங்ககிட்ட ரேஷன் கார்டு இருந்தா… தமிழ்நாடு அரசினுடைய எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும். ஏனெனில், ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வரும் புதிய புதிய திட்டங்கள் ரேஷன் கடைகள் மூலமாக தான் மக்களை சென்றடைகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னாக வந்த அறிவிப்பின்படி, தானியங்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தனர். குறைந்த விலையில் மக்களுக்கு பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு முயற்சித்துக்கொண்டே தான் இருக்கிறது.
ALSO READ > ரேஷன் கார்டுக்கு வெறும் 45 ரூபாய் கொடுத்தா மட்டும் போதும்!
சில நாட்களுக்கு முன்பு QR Code மூலம் பணம் செலுத்தும் வசதி வரப்போவதாக அறிவித்திருந்தனர். தற்போது வந்த செய்தியின்படி, தமிழத்தில் உள்ள எல்லா ரேஷன் கடைகளிலும் QR Code மூலம் பணம் செலுத்துகிற முறையானது விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. ரொக்கமற்ற பணபரிவர்த்தனைக்காக ஏற்கனவே 12 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் UPI வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்க பதிவாளர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகளிலும் மே மாதம் 31 ஆம் தேதிக்குள் Paytm, Google pay, phone Pe மூலமாக பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இனி வரும் காலங்களில் ரேஷன் கடைக்கு போகும் போது சில்லறை எடுத்துட்டு போகணும்னு அவசியம் இல்லை..! உங்க போன் மட்டும் எடுத்துட்டு போங்க… ஒரே க்ளிக்ல பணத்தை SEND பண்ணுங்க…
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ஒரு அருமையான வேலைவாய்ப்பு வந்துவிட்டது! இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை!
- மீண்டும் தமிழ்நாட்டில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் (IGCAR) அட்டகாசமான வேலை! மாதம் ரூ. 40000 சம்பளம்!
- Opportunity Knocks: JKPSC Recruitment 2023 Offers Prestigious Job Vacancies with a Salary up to Rs. 1,60,600
- நேர்காணல் முறையில் தமிழ்நாட்டில் உள்ள NIFTEM நிறுவனத்தில் மாதம் ரூ.31,000 சம்பளத்தில் வேலை! APPLY AT www.niftem-t.ac.in
- UKPSC Recruitment 2023: Apply Online for 64 Job Vacancies and Earn a Monthly Salary of up to Rs.1,12,400