10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட புதிய உத்தரவு!

As the 10th, 11th and 12th class general exams are approaching the new order issued by the school education department

தமிழகத்தில் ஆண்டுதோறும் 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், 2023-24 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வும் வருகிற மார்ச் மாதம் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. பொதுத்தேர்வு தொடங்க இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

ALSO READ : நெருங்கும் புயல் : நாளை நடைபெற உள்ள அண்ணா பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் உள்ள 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் வருகிற பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளது. இதில் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு மதிப்பெண்கள் மற்றும் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை எப்படி வழங்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்காக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதாவது, மாணவர்களின் வருகைப் பதிவு நாட்கள், பள்ளித் தேர்வு மதிப்பெண்கள், செயல்திட்டங்கள் மற்றும் கல்வி இணைச்செயல்பாடுகள் ஆகிவற்றின் அடிப்படையில் அகமதிப்பீடு மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top