ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி தொடங்கிடிச்சி..! எங்கன்னு தெரியுமா?

Asia's largest air show begins..! Do you know where it is

ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி கர்நாடக மாநிலம் பெங்களூர் யலஹங்கா விமானப்படை தளத்தில் நாளை நடைபெற உள்ள நிலையில் அதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஏரோ இந்தியா 2023 (Aero India 2023) எனும் பெயரில் பிரமாண்ட விமான நிகழ்ச்சியாக இது நடைபெற உள்ளது. இந்த விமான கண்காட்சியானது இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கமாகும். இந்நிலையில், இந்த ஆண்டு இந்த விமான கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சி 1996-ம் ஆண்டில் இருந்து பெங்களூருவில் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் உலக தலைவர்கள், விமானத்துறை முதலீட்டாளர்கள், பெரும் விமான உற்பத்தி நிறுவனங்கள் கலந்து கொள்வது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில், இந்த விமான கண்காட்சியில் பல்வேறு விமான சாகசங்களும், நிகழ்ச்சிகளும் நடைபெறுவதால் அதனை காண ஏராளமான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும், உலக மெங்கும் உள்ள பயன்பாட்டில் இருக்கும் பல்வேறு தரப்பட்ட விமானங்களை பொதுமக்கள் நேரில் கண்டு ரசித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் முறையான அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே கண்காட்சி நடைபெற உள்ள வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

இந்த நிகழ்ச்சிக்கான முழு விபரங்களை http://www.aeroindia.gov.in எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனவும் மேலும் இந்த இணையதளத்தில் பொதுமக்கள் கண்காட்சியில் கலந்து கொள்வதற்கான டிக்கெட்டை பதிவு செய்து அதனை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கூரப்பட்டுள்ளது. இதில் விமானங்களை பார்வையிடும் டிக்கெட், பொது பார்வையாளர் டிக்கெட் மற்றும் வணிக பார்வையாளர் டிக்கெட் என மூன்று விதமான டிக்கெட்டுகள் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படுகின்றன. தற்போது பொது பார்வையாளர்கள் இந்த ஷோவ்வை கண்டுகளிக்க ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஷோவ்வுக்காக வாங்கப்படும் பொது பார்வையாளர் டிக்கெட் மற்றும் விமானங்களை பார்வையிடும் டிக்கெட் ஆகியவை அந்த ஒரு நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இதேபோல், வெளிநாட்டு விருந்தினர் பார்வையாளர்களுக்கு 50 அமெரிக்க டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்திய விருந்தினர் பார்வையாளர்கள் ரூ. 1000 ஆயிரம் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். இந்தியராக இருக்கும் பிசினஸ் விசிட்டர்களுக்கு 5,000 ரூபாய் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் 150 அமெரிக்க டாலர்கள் அவர்களிடம் இருந்து பெறப்படும். இந்தியாவின் மிக முக்கியமான போர் விமானங்களான ரஃபேல், எஃப்-21, சுகோய் எஸ்யு-57, எல்சிஏ தேஜாஸ், போயிங் எஃப்/ஏ18சூப்பர் ஹார்னெட் போன்ற விமானங்கள் இந்த விமான கண்காட்சியில் பார்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு அனுமதி பெற்றவர்கள் அருகில் இருந்து இந்த விமானங்களை பார்த்துக் கொள்ளலாம். விமான சாகச நிகழ்ச்சிகளை பொது பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம். விமான கண்காட்சி நடைபெறுவதை தொடர்ந்து பெங்களூரு நகரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here