நடப்பு ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பை தொடரானது சென்னை , டெல்லி, அகமதாபாத், மும்பை உட்பட பல்வேறு மைதானங்களில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை விளையாட இந்திய அணி பெங்களூரில் உள்ள மைதானத்தில் தனது பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஆண்டுதோறும் இந்திய அணி வீரர்களின் உடல் தகுதியை பரிசோதிக்க யோ யோ டெஸ்ட் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் பெங்களூரில் இந்திய அணி வீரர்களுக்கு யோ யோ டெஸ்ட் முறை நடத்தப்பட்டது. இந்த டெஸ்ட்டின் பொழுது வீரர்கள் எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை இணையதளத்தில் பதிவிடலாம் என்றும். எக்காரணத்தை கொண்டும் டெஸ்டில் என்ன ஸ்கோர் பெற்றுள்ளோம் என்பதை பதிவிட கூடாது என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Also Read : யூடியூப்பில் இப்படி ஒரு வசதி வரபோகுதா..? அதுவும் இன்னும் கொஞ்ச நாள்லையேவா? சீக்கிரம் பாருங்க…
ஆனால், இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி பிசிசிஐ யின் விதியை மீறி நான் வெற்றிகரமாக யோ யோ டெஸ்ட் முடித்துவிட்டேன். அதில் நான் 17.2ஸ்கோர் வைத்துள்ளேன் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு சமூக ஊடங்களில் பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல் விராட் கோலி விதிமுறையை மீறியதற்காக BCCI எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.