இன்று சட்டமன்ற தேர்தல்! முதன்முறையாக இளைஞர்கள் நடத்தும் தேர்தல்-தேர்தல் ஆணையர் அறிவிப்பு

Assembly election today For the first time youth-run elections-Election Commissioner Notification-Gujarat Election To Motivate Young Voter

குஜராத் மாநிலத்தில் சட்ட மன்ற தேர்தல் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மன்ற தேர்தல் வருகிற டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. குஜராத் மாநகரில் இன்று முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று நடக்கும் முதல் கட்ட தேர்தல் மொத்தம் 89 தொகுதிகளில் நடைபெற உள்ளது. குஜராத்தில் நடைபெறும் இந்த சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக, எதிக்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் போட்டியிட உள்ளன.

இந்நிலையில், குஜராத்தில் நடக்கும் இந்த முதல் கட்ட தேர்தல் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குஜராத்தில் இன்று நடக்கவிருக்கும் முதல் கட்ட தேர்தலில் குஜராத்தில் உள்ள 4.9 கோடி வாக்காளர்கள் வாக்களித்து புதிய சாதனையை படைக்க வேண்டும் என்றும் 18 வயது பூர்த்தி செய்து புதிய வாக்காளர் அட்டை வைத்திருக்கும் இளம் வாக்காளர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதன்முறையாக இளம் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இன்று நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் 33 வாக்குச்சாவடி மையங்கள் இளைஞர்கள் மூலம் நிர்வாகிக்கப்படுகிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில், 4.9 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் அவற்றில் 4 லட்சத்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 9.8 லட்சம் மூத்த குடிமக்கள் வாக்காளர்களும் இருக்கின்றனர். இவர்கள் எளிதில் வந்து வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here