12 வயதில் +2 தேர்வில் உலக சாதனை படைத்த மாணவி..! பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!!

At the age of 12 a student who set a world record in the +2 exam Greetings from Prime Minister Modi in person

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் தனிஷ்கா என்ற மாணவி நிகழ்த்திய சாதனை தற்பொழுது உலக அளவில் பாராட்டை பெற்று வருகிறது. தனிஷ்கா(வயது 15) இவர் தனது 11 வயதில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதி அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், தனது 12 வது வயதில் 12 ஆம் வகுப்பு தேர்வையும் எழுதி அதிலும் சாதனை படைத்துள்ளார். அவரது பெயர் ஆசிய சாதனைகள் புத்தகம் மற்றும் இந்திய சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், தற்பொழுது தேவி அகல்யா பல்கலை கழகத்தில் பி.ஏ. எல்.எல்.பி. படிப்பை தொடர்ந்து வருகிறார். 15 வயதில் பட்டப்படிப்பு முடித்த இளம் மாணவி என்ற பெருமையையும் அவர் பெற இருக்கிறார்.

உலக சாதனை படைத்த மாணவி

இந்த சூழ்நிலையில், இளம் மாணவி தனிஷ்கா மற்றும் அவரது தாயார் அனுபா ஆகியோர் இன்று நாட்டின் பிரதமாரான மோடியை நேரில் சந்தித்தனர். அப்பொழுது மோடி அவர்கள் அந்த மாணவியுடம் உன்னுடைய வருங்கால இலக்கு என்ன? என்று கேட்டார். அதற்கு அந்த மாணவி நான் வருங்காலத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக வரவேண்டும் என்பது தனது விருப்பம் என பதிலளித்து உள்ளார்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN