அடேங்கப்பா..! 92 பணியிடங்களுக்கு 3.16 லட்சம் பேர் போட்டியா? நாளை நடக்கும் குரூப்-1 தேர்வு…!

0
Atengappa 3.16 lakh people competing for 92 posts Tomorrow's Group-1 exam-Tomorrow Group 1 Exam

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) தமிழ் நாட்டில் உள்ள அரசு காலிபனியிடங்களை நிரப்ப உள்ளதாக கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி அறிக்கையை வெளியிட்டது. இதில், குரூப்-1 தேர்வின் பதவிகளில் உள்ள 18 துணை கலெக்டர்கள், 26 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர், 25 வணிகவரி உதவி ஆணையர், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த பதவிகள் குரூப்-1 தேர்வின் கீழ் உள்ளத்தால் இதற்கான முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்திருந்த நிலையில், இதற்கான முதல்நிலை தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் சில காரணங்கலால் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த TNPSC குரூப்-1 தேர்வுக்கு மொத்தம் 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், ள்ளிவைக்கப்பட்ட முதல்நிலைத் தேர்வு நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெறும். தேர்வெழுதும் தேர்வர்கள் இதற்கான ஹால்டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here