கர்நாடக சட்டசபை தேர்தலானது நாளை (புதன்) நடைபெறுகிறவிருக்கின்றது. அங்கு பல கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக பல்வேறான கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அறிவித்திருக்கின்றன.
அதாவது, அங்கு இலவச மின்சாரம், இலவச அரிசி, பஜ்ரங் தள அமைப்புக்கு தடை, மற்றும் தமிழ்நாட்டைப் போலவே கர்நாடகாவிலும் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் போன்ற அறிவிப்புகளை காங்கிரஸ் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து பா.ஜனதா கட்சியும் வருடத்திற்கு இலவச மூன்று சிலிண்டர் மற்றும் அரை லிட்டர் பால் பாகெட்டினை தினமும் அளித்தல் போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டது.
இந்த அறிவிப்புகளால் கர்நாடகாவில் தேர்தல் களமானது மேலும் சூடுபிடித்திருக்கிறது. கர்நாடகாவைத் தொடர்ந்து தெலுங்கானாவிலும் காங்கிரஸ் கட்சியானது கவர்ச்சிகரமான அறிவிப்பினை அளித்திருக்கிறது. அதாவது அங்கு தேர்தல் அறிவிப்பு வெளிவருவதற்கு முன்னரே இலவச மின்சார ஸ்கூட்டரை மாணவிகளுக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் முடிவில் தெலுங்கான சட்டசபை தேர்தலானது நடைபெறவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையின்போது தெலுங்கானாவிற்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி வந்துள்ளார். இதைத் தொடர்ந்து இளைஞர்களுக்கான தேர்தல் திட்ட அறிக்கையான “ஐதராபாத் இளைஞர் பிரகடனம்” என்ற பெயரில் பிரியங்கா காந்தி முன்னிலையில் அறிவித்திருக்கின்றது.
அதாவது தெலுங்கானாவில் தியாகிகளாக தெலுங்கானா தனிமாநில போராட்டத்திற்காக உயிர்நீத்த இளைஞர்கள் எண்ணப்படுவார்கள். மேலும் அவர்களின் பெற்றோருக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.25,000 அளிக்கப்படும். அதுமட்டுமல்லாது வட்டியில்லா கடனாக ரூ.10,00,000 வரை இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அளிக்கப்படும். மேலும் 18 வயதுக்கு மேல் உள்ள மாணவிகளுக்கு இலவச மின்சார ஸ்கூட்டர் வழங்கப்படும் ஆகிய அறிவிப்புகள் “ஐதராபாத் இளைஞர் பிரகடனம்” என்ற இளைஞர்களுடைய தேர்தல் திட்ட அறிக்கையில் முக்கியத்துவம் வகுத்திருக்கிறது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ரேஷன் கார்டு ரத்து பண்றாங்களா? உங்க ரேஷன் கார்ட பத்திரமா வச்சுக்கோங்க..!
- மத்திய அரசாங்க வேலை செய்ய ரெடியா இருங்க! நேரடி நேர்காணல் முறையில் வேலைவாய்ப்பு வெளியீடு!
- பல்வேறு வகையான பணியிடங்களை நிரப்ப முடிவு! AAICLAS லிமிடெட்டில் வேலை! மிஸ் பண்ணாதீங்க!
- நீங்கள் எதிர்ப்பார்த்த வேலை வந்துவிட்டது! RITES நிறுவனத்தில் புதியதோர் வேலை வெளியீடு!
- தமிழகத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு! திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை அறிவிப்பு!