கடந்த 2020 ஆம் ஆண்டு நாட்டில் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்துவதற்கான உத்தரவை வெளியிட்டது. அதன்படி, பல்வேறு கல்வி கொள்கை அம்சங்கள் மக்களிடையே வரவேற்பு பெற்று இருந்தது. இந்த நிலையில் புதிய கல்வி கொள்கையின் படி 1 ஆம் வகுப்பு மாணவர்களை சேர்க்கும் வயது இனி ஆறு ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, குழந்தைகள் அனைவரும் தனது ஆறாவது வயதில் அறிவாற்றலும் சமூக வளர்ச்சியின் ஒரு புதிய கட்டத்தில் நுழைவதாகவும் சரியான பருவம் என்றும் 90% மூளை ஆறு வயதுக்கு வளர்ச்சி அடைகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் 3 மடங்கு உயரபோகுதா? சற்றுமுன் கிடைத்த புதிய தகவல்!!
மேலும், மாணவர்கள் மற்றவர்களுடன் பழகுவதற்கு சரியான பருவமாக இருக்கும் என்றும் வரும் ஆண்டுகளில் மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்வி கொள்கையின் படி இனி பள்ளிகளில் 6 வயதில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.