மாணவர்களின் கவனத்திற்கு… 11-ஆம் வகுப்பு சேர போறீங்களா? இந்த 4 பாடப்பிரிவுள் இல்லையாம்…! முழு விவரம் உள்ளே…!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தன. அதனையடுத்து சமீபத்தில் அந்த தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மாணவர்கள் அடுத்த கல்வியாண்டுகளில் மேற்படிப்பை தொடருவதற்காக தயாராகி வருகின்றனர். அதன்படி பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை முடித்த மாணவர்கள் 11-ஆம் வகுப்புகளுக்கு செல்வதற்கான சேர்க்கையானது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனையடுத்து, அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையானது, இந்த வருடத்தின்போது எப்பொழுதும் போல இல்லாமல் உயர்ந்திருக்கின்றன.

மாணவர்களின் கவனத்திற்கு... 11-ஆம் வகுப்பு சேர போறீங்களா

இதன் மத்தியில் நான்கு முக்கிய பாடப்பிரிவுகளை அரசு பள்ளிகளில் இருந்து, ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, துணி நூல் தொழில்நுட்பம், அடிப்படை மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வேளாண் அறிவியல் போன்ற அரசுப்பள்ளிகளில் காணப்படும் 4 பாடப் பிரிவுகளை ரத்து செய்யப்பட இருக்கிறது. இதனால் அப்பிரிவுகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். மேலும், நெல்லை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பட்டதாரி ஆசிரியர் இப்பிரிவுகளில் பயில விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள் அனைவரும் வேறு பாடப்பிரிவுகளுக்கு மாற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தற்போது தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாது, இப்பாடப்பிரிவுகளின் கீழ் செயல்படும் ஆசிரியர்கள் அனைவரும் வேறு பள்ளிகளுக்கு கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, இப்பாடப்பிரிவுகளானது தஞ்சாவூர், கண்ணுகுடி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 12 இடங்களில் ரத்தாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுத் தொடர்பாக எந்தவித அறிவிப்போ உத்தரவோ தற்போது வரை வெளியிடப்படவில்லை என்றும் கூறப்பட்டிருக்கின்றது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN