ஆவின் நிறுவனத்தில் புதியதோர் வேலை அறிவிப்பு! நீங்களும் தமிழக அரசு வேலை பாக்கலாம்!

ஆவின் நிறுவனத்தில் புதியதோர் வேலை அறிவிப்பு
ஆவின் நிறுவனத்தில் புதியதோர் வேலை அறிவிப்பு

தமிழ்நாடு அரசு வேலைக்காக வெயிட் பன்ற எல்லாருக்குமே இது ஒரு அருமையான வாய்ப்பு. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (Tamil Nadu Cooperative Milk Producers Federation Limited) வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கி வருகிற இந்த ஆவின் நிறுவனத்தில் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேர்க்கப்படுகின்றன. விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்.

ஆவின் வேலைவாய்ப்பு செய்திகள்

தற்போது வந்துள்ள வேலை அறிவிப்பில் கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) பணிக்கு ஒரு காலியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோவையில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் அரசு சம்பளமாக 43 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொள்ள முடியும். கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 50 ஆக இருக்க வேண்டும்.

ALSO READ : சென்னை NIEPMD நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

மேலும், AAVIN கோயம்புத்தூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் B.V.Sc முடித்திருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. நேர்காணல் முறையில் ஆட்களை தேர்வு செய்கிறது ஆவின் நிறுவனம். நேர்காணலுக்கு செல்ல விரும்பும் விண்ணப்பதாரர்கள் New Dairy Complex, Pachapalayam, Kalampalayam (Po), Perur (Via), Coimbatore-641010 என்ற முகவரிக்கு 28 நவம்பர் 2023 அன்று செல்லுங்கள்.

முழு விவரங்களையும் AAVIN Official Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பில் படித்து அறிந்துகொண்டு நேர்காணலுக்கு ரெடி ஆகுங்கள்

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்