இந்த இடங்களில் 5 G கோபுரங்கள் அமைக்க தடை- மத்திய தொலைத்தொடர்புத்துறை உத்தரவு

Ban on setting up 5 G towers in these places- Central Department of Telecom order-Ban On Setting Up 5G Towers Near Airports

இந்தியாவில் 5G சேவையை கடந்த அக்டோபர் 1-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில், குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விமான நிலையங்களுக்கு அருகே 5G சேவை வழங்கக் கூடாது என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது. விமான கருவிகள் பாதிக்கப்படும் என்பதால் விமான நிலையங்களுக்கு அருகே 5G சிக்னல் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், விமான நிலையங்களின் ஓடுபாதையின் இருபுரங்களிலும் 2,100 மீட்டர் தூரத்திற்கும், ஓடுபாதையின் மத்திய பகுதியில் இருந்து 910 மீட்டர் தூரத்திற்கும் இடையே 3,300 முதல் 3,670 மெகா ஹெர்ட்ஸ் வரையிலான அலைவரிசையைக் கொண்ட 5G சிக்னல் கோபுரங்கள் அமைக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here