
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாகவே பரவாலக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு அருவிகளில் நீர் ஆர்பரித்து கொட்டுகிறது. அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான குற்றால அருவி உள்ளது. இந்த அருவியில் ஆர்பரித்து விழும் தண்ணீரில் குளிக்க தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் வருகை தருகின்றனர்.
ALSO READ : தொடர்ந்து எகிறும் வெங்காயத்தின் விலை! முக்கிய கோரிக்கை அரசுக்கு வந்துள்ளது!
அதிலும் குறிப்பாக வார விடுமுறை தினங்களில் குற்றால அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக காணப்படும். இந்த குற்றால அருவிகளில் வரும் தண்ணீரின் அளவு சீராக இருந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்படும். தண்ணீரின் அளவு வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ள காரணத்தினாலும், சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டும் 2வது நாளாக குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.