சிறுகோள் என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது சூரிய குடும்பத்தின் ஆரம்பகால உருவாக்கத்திலிருந்து எஞ்சி இருப்பவை ஆகும். பெரும்பாலான சிறுகோள்கள் ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கிறது. இதில் சிலவைகள் கோள்கள் போன்று இருந்தாலும் பெரும்பாலும் குழிகள் அல்லது ஆழமான பள்ளங்களைக் கொண்டவையாக இருக்கிறது.
சில சிறுகோள்கள் பூமிக்கு மிக நெருக்கமாக பயணித்த சென்றிருக்கிறது. சூரிய மண்டலத்தில் பல்வேறு விண்கற்கள் மிதந்துக் கொண்டிருக்கின்றன. இவைகளில் சில பூமியின் இருக்கும் ஈர்ப்பு விசை காரணத்தால் அவ்வப்போது வளிமண்டலத்துக்குள் நுழைகிறது.
குறிப்பாக பூமியை நோக்கி பயணிக்கும் சிறுகோள்கள் மற்றும் பூமிக்கு ஆபத்து விளைவிக்க வாய்ப்பு இருக்கும் சிறுகோள்களை (NEOs- Near-Earth Objects) உற்று நோக்கி கண்காணித்து வருகிறது நாசாவின் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம்.
இந்நிலையில், ஒரு விமானத்தின் அளவிலான ஒரு பெரிய பாறையாலான “2023 எப்இசட்3 ” சிறுகோள் ஏப்ரல் 6 (நாளை) அன்று பூமியை நோக்கி வர உள்ளது. இந்த சிறுகோள் குறித்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் இவை சுமார் 26 லட்சத்து 10 ஆயிரம் மைல் தொலைவில் உள்ளது என்றும் தொரிவிக்கப்பட்டுள்ளது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலை வேணுமா? கிளெர்க் வேலை வேணுமா? தமிழ்நாடு அரசு அட்டகாசமான வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது!
- 10வது படித்தவர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் தமிழ்நாடு அரசு வேலை வந்தாச்சு! இன்னைக்கே அப்ளை பண்ணிடுங்க!
- ஆபீஸ் அசிஸ்டன்ட், கிளெர்க், ரிசப்ஷனிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைக்கு தமிழக அரசில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
- பல்வேறு பணியிடங்களை வெளியிட்டுள்ளது பெல் நிறுவனம்! நேர்காணலில் மத்திய அரசு வேலை ரெடி!
- கவர்மெண்ட் வேலை பாக்குற உங்களுக்குத்தான் இந்த மகிழ்ச்சியான செய்தி! சம்பளம் அதிகமா தராங்களாம்!