தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பொழிய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பொழிந்துள்ளது. அதனையடுத்து, அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா, வங்கக்கடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளை தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read : தமிழ்நாடே இனிமே மாறப்போகுது..! வேற லெவலில் ரெடியாகி வரும் எலக்ரிக் பஸ்… புதிய அப்டேட்!!