மக்களே உஷாரா இருங்க… தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி!

Be careful people One person died of Corona in Tamil Nadu

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா வைரசில் இருந்து உருமாறிய ஒமைக்ரோன் போன்ற புதிய வகை கொரோனா விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக இருந்தன.

ஆனால், தொடர் ஆராய்ச்சியின் காரணமாக கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், புதிய வகை கொரோனா, புதிய வகை வைரசுகள் தற்பொழுது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதலே இந்த கொரோனாவின் அலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும். இந்நிலையில், தற்பொழுது இந்த கொரோனா வைரஸானது மிண்டும் உருவமெடுத்து எக்ஸ்.பி.பி கொரோனாவாக மாறியுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடியை சேர்ந்த 54 வயதான பார்த்திபன் என்பவர் சில நாட்களுக்கு முன் உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பார்த்திபன், கடந்த 23ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பார்த்திபன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN