இனி கோவை டூ பெங்களூர் இடையேயும் வந்தே பாரத் ரயில் சேவை..!

Bharat train service now between Coimbatore and Bangalore

நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து சேவைகளில் ரயில் போக்குவரத்து சேவை என்பது அதிக மக்களால் விரும்பப்படும் ஒரு சேவையாக உள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசால் பல்வேறு வழித்தடங்களில் “வந்தே பாரத்” என்னும் அதிநவீன ரயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயிலில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் மிகவும் குறைவு. இந்த ரயில்கள் இந்தியாவில் இயக்கப்பட்டு வரும் மற்ற ரயில்களை விட வேகமாக செல்லும் திறனை கொண்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரையில் இந்த வந்தே பாரத் ரயிலானது கோவை-சென்னை மற்றும் சென்னை-நெல்லை, சென்னை-மைசூரு ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, கோவை மற்றும் பெங்களூர் வழித்தடங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை இயக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ALSO READ : நெருங்கி வரும் புத்தாண்டு பண்டிகை : ஜியோ வெளியிட்ட அதிரடி ஆஃபர்!

மக்களின் கோரிக்கையை அடுத்து, தென்னக ரயில்வே சார்பில் கோவை மற்றும் பெங்களூர் இடையே வருகிற 30 ஆம் தேதி வந்தே பார்த் ரயில் இயக்கப்பட உள்ளது. கோவை-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். புதிதாக இயக்கப்பட உள்ள இந்த வந்தே பாரத் ரயிலானது கோவை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top