BHEL நிறுவனத்தில் மூத்த ஆலோசகர் வேலைவாய்ப்பு – ரூ.125000/- மாத சம்பளம் || ஆன்லைனில் விண்ணப்பிக்க விரையுங்கள்..!

BHEL RECRUITMENT 2023: பாரத மிகு மின் நிறுவனத்தில் (BHEL) 2023 ஆம் ஆண்டிற்கான தனது தொழில் துறையில் ரோலிங் ஸ்டாக் வணிகத்திற்கான மூத்த ஆலோசகர் (Senior Advisor) பதவிக்கு தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த பதவிக்கு ஆன்லைனில் முலம் விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.11.2023. இவ்வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் டெல்லியில் பணி செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

BHEL RECRUITMENT 2024
BHEL நிறுவனத்தில் மூத்த ஆலோசகர் வேலைவாய்ப்பு – ரூ.125000/- மாத சம்பளம் || ஆன்லைனில் விண்ணப்பிக்க விரையுங்கள்..! 2

தகுதி:

  • இயந்திரவியல்/மின்னணுவியல்/கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் (CSE) இளங்கலைப் பட்டம் (BE/B.Tech)
  • ரோலிங் ஸ்டாக் துறையில் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
  • சிறந்த தகவல் தொடர்பு திறன், சுயமாக இயங்கும் திறன் மற்றும் குழுவாக வேலை செய்யும் திறன் இருத்தல் வேண்டும்.

BHEL வேலை சம்பளம் மற்றும் பிற சலுகைகள்:

  • மாத சம்பளம்: ரூ.125000/-
  • வீட்டு வாடகை அலவன்ஸ் (HRA) அல்லது நிறுவனத்தின் குடியிருப்பு, மாதாந்திர மொபைல் போன் கட்டணத்தை திருப்பிச் செலுத்துதல், நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின்படி அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு நிறுவன போக்குவரத்து போன்ற சலுகைகள் வழங்க பட உள்ளது.

ALSO READ: திருவண்ணாமலை மாவட்ட திட்ட அலுவலகத்தில் வேலை!

BHEL RECRUITMENT-க்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

  1. BHEL இன் அதிகாரப்பூர்வ இணையதளமான bhel.com க்குச் செல்லவும்.
  2. “Recruitment” அல்லது “Careers” MENU-க்கு சென்று, “Current Openings” இணைப்பைத் தேர்வுசெய்யவும்.
  3. “Senior Advisor (Rolling Stock)” அறிவிப்பைக் கண்டுபிடித்து, தகுதி விவரங்களைச் சரிபார்க்கவும்.
  4. நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், “Apply Now” பொத்தானை க்ளிக் செய்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  5. தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்.
  6. விண்ணப்பப் படிவத்தை கவனமாக மதிப்பாய்வு செய்து, சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2023.

மேலும், முழு விவரங்களை அறிய BHEL Office Notification link ஐ கிளிக் செய்து, அதிலுள்ள தகவல்களை கவனமாக படித்தபின் விண்ணப்பியுங்கள்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…